- செய்திகள், வணிகம்

தொடரும் காளையின் வெற்றி…

புதுடெல்லி, ஏப்.1:-

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 3 புள்ளிகள் அதிகரித்தது.

தொடக்கத்தில்…

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. ஆனால், நேற்று பங்கு முன்பேர கணக்கு முடிப்பு தினம் என்பதால்  முதலீட்டாளர்கள் கடைசி நேரத்தில் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, தொலைத்தொடர்பு, பொறியியல் சாதனம் உள்பட சில துறைகளின் குறியீட்டு எண்கள் சரிந்தது. ரியல் எஸ்டேட், மின்சாரம், வங்கி, வாகனம் உள்பட பல துறைகளின் குறியீட்டு எண்கள் உயர்ந்தது.

இன்போசிஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் டி.சி.எஸ்., இன்போசிஸ், சன் பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ் உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 3.28 புள்ளிகள் உயர்ந்து 25,341.86 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 3.20 புள்ளிகள் அதிகரித்து 7,738.40 புள்ளிகளில் நிலை கொண்டது.

Leave a Reply