- செய்திகள், சேலம், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க.வினர் பா.ம.க.வில் இணைந்தனர் தலைவாசல் பகுதி

ஆத்தூர்,ஏப்.24-
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி(தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ம.க.வின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அக்ரி.சண்முகவேல் மூர்த்தியை அறிமுகப்படுத்தும் கூட்டம் காட்டுக்கோட்டை திருமண மண்டபத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைவாசல் ஒன்றிய தே.மு.தி.க. மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தனர். இந்தக் கூட்டத்தில் பா.ம.க.வின் தேர்தல் பொறுப்பாளர் சதாசிவம், மாவட்ட செயலாளர் மலைபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply