- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க. வழக்கறிஞர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

சென்னை, மார்ச்.7-
தே.மு.தி.க. வழக்கறிஞர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

கூட்டணி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறார். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் என்று ஒரு தரப்பினரும், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதே தகவல்கள் சமூக வளைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

ஆனால் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் யாருடனும் பேசவே இல்லை. இதுதொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். மக்கள் நலன் கருதி அவர் தைரியமான முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் சந்தரகுமார் அறிக்கை விடுத்தார். இதனால் கூட்டணி தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்த் நேற்று தே.மு.தி.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. தேர்தலின்போது மற்ற கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுப்பது குறித்தும் சட்ட ரீதியாக அணுகுவது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply