- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க. வக்கீல் அணியின் எச்சரிக்கைக்கு பதிலடி: கரை வேட்டிக்கு காப்புரிமை உள்ளதா? சந்திரகுமார் எம்.எல்.ஏ கேள்வி…

சென்னை, ஏப்.18-
தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காத அதிருப்தியில் தே.மு.தி.க.வில் இருந்து வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் வெளியேறினர். அவர்கள் மக்கள் தே.மு.தி.க. என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தே.மு.தி.க. வக்கீல் அணி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது. அதன்படி, தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது. தே.மு.தி.க. கொடி, தே.மு.தி.க. கரை வேட்டியை பயன்படுத்தக்கூடாது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மக்கள் தே.மு.தி.க. தலைவர் வி.சி.சந்தரகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நாங்கள் விஜயகாந்த் படத்தையோ, தே.மு.தி.க. கொடியையோ பயன்படுத்தவில்லை. தே.மு.தி.க கரை வேட்டியை கட்டும் முடிவில் இருந்து மாறப்போவதில்லை. கரைவேட்டிக்கு தே.மு.தி.க.வினர் காப்புரிமை ஏதேனும் பெற்றிருக்கிறார்களா" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply