- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் மேலும் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விஜயகாந்த் அறிவிப்பு…

சென்னை, ஏப்.15-
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. 4-வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.
வேட்பாளர்கள்

தே.மு.தி.க. சார்பில் நேற்று முன்தினம் மாலை 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். பிறகு நள்ளிரவு மேலும் 35 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
காஞ்சிபுரம்
1. வேளச்சேரி-வி.என்.ராஜன்
2. உத்திரமேரூர்-எம்.ராஜேந்திரன்
3. காஞ்சிபுரம்-ஜெ.சண்முகசுந்தரம்
4. சோளிங்கர்-பி.ஆர்.மனோகர்
5. ராணிப்பேட்டை-எஸ்.நித்தியானந்தம்
6. கீழ்வைத்தியனான்குப்பம்(தனி)-எம்.தேவியம்மாள்
7. ஆம்பூர்-ஆர்.வாசு
8. ஜோலார்பேட்டை-ஏ.பையாஸ் பாஷா
9. திருப்பத்தூர்-எம்.கே.ஹரிகிருஷ்ணன்
10. வேப்பனஹள்ளி-என்.நாகராஜ்
சேப்பாக்கம்

11. ஓசூர்-வி.சந்திரன்
12. செங்கம்(தனி)-ஏ.கலையரசி
13. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- வி.அப்துல்லா சேட்
14. கங்கவல்லி(தனி)-ஆர்.சுபா
15. சேந்தமங்கலம்(தனி)-மு.சத்தியா
16. பரமத்தி வேலூ-டாக்டர் கே.முத்துகுமார்
17. திருச்செங்கோடு-ஜெ.விஜயகமல்
18. குமாரபாளையம்- பி.ஏ.மாதேஸ்வரன்
19. ஈரோடு கிழக்கு- பொன்.சேர்மன்
20. மொடக்குறிச்சி- எம்.ரமேஷ்
கோவை வடக்கு
21. காங்கேயம்- கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன்
22. பவானி-ப.கோபால்
23. அந்தியூர்-எம்.கே.ராஜாசம்பத்
24. உதகமண்டலம்- டாக்டர் கே.கிங் நார்சிஸஸ்
25. சூலூர்- கே.தினகரன்
26. கோவை வடக்கு- பி.முருகன்
27. பொள்ளாச்சி- எஸ்.முத்துக்குமார்
28. நிலக்கோட்டை(தனி)- கே.ராமசாமி
29. குளித்தலை- டி.ஜமுனா
30. மணப்பாறை- பி.கிருஷ்ணகோபால்
நெல்லை

31. பெரம்பலூர்(தனி)- கே.ராஜேந்திரன்
32. வேதாரண்யம்- தா.வைரநாதன்
33. திருவாடனை- வி.மணிமாறன்
34. விருதுநகர்- எம்.சையது காஜா செரிப்
35. திருநெல்வேலி- எஸ்.மாடசாமி
ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா ஆகிய கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் விஜயகாந்த் கூறினார்.
29 தொகுதி வேட்பாளர்கள்
தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 104 தொகுதிகள் அறிவிப்பதற்கு முன்பாகவே 75 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்து விட்டார். நேற்று மாலை மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. போட்டியிடும் 130 தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டு தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. தே.மு.தி.க. 29 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது உள்ளது. மீதம் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கும்போது வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply