- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க. அதிருப்தியாளர்களால் மக்கள் நல கூட்டணிக்கு எந்த பின்னடைவும் கிடையாது

மீனம்பாக்கம், ஏப்ரல்;.06 –
தே.மு.தி.க அதிருப்தியாளர்ளால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறினார்.
திருமாளவன் பேட்டி
சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்iயாளர்களை சந்தித்து பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
தே.மு.தி.க –வில் இருந்து சந்திரக்குமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் நீக்கப்பட்டது அவர்களின் உள்கட்சி பிரச்சினை ஆகும். ஆதை விஜயகாந்த் சமாளித்துவிடுவார். நீக்கப்பட்ட சந்திரக்குமார் தே.மு.தி.க மக்கள் நலக் கூட்டனி பிரசாரத்தில் ஆர்வமுடன் பங்கேற்று இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என உரையாற்றியவர்.
பாதிப்பில்லை

இந்தநிலையில் சந்திரக்குமார் தற்போது முரனாக பேசுவது அவருக்கு ஏதும் பின்புலம் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன். மற்றும் விஜயகாந்த் தொண்டர்களின் கருத்தை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறார். சந்திரக்குமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்களால் மக்கள் நலக்கூட்டணிக்கு எந்த வித பின்னடைவும் ஏற்படாது.
மேலும் பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.சி.ஐ கட்சிகள் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால் மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். கூட்டணியில் 3வது கட்ட தொகுதி சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் இரண்டு தினங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply