- செய்திகள், மாநிலச்செய்திகள்

தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் அசாமுக்கு, மத்திய அரசின் உதவி தொடரும்

கவுகாத்தி, ஏப்.7-

அசாம் மாநிலத்தில் சட்டமன்ற ேதர்தல் முடிவு எப்படியிருந்தாலும்,  அந்த மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்து வரும் உதவிகள் ெதாடரும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

நிதின் கட்காரி பேட்டி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறியதாவது-

அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் அந்த மாநில வளர்ச்்சிக்காக  மத்திய அரசு அளித்து வரும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். அசாம் மாநிலத்துக்கு சட்டவிரோதமாக வந்து குடியமர்வோர் பிரச்சினைக்கு  மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு அமைந்தால்  நல்ல தீர்வு ஏற்படும்.

உதவிகள் தொடரும்

ஒருவேளை பா.ஜனதா காங்கிரஸ் கட்சியால் தோற்கடிக்கப்பட்டாலும் அசாம் மாநில உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து உதவிகள் செய்வோம். வளர்ச்சியை பொறுத்தமட்டில் அரசியல் பாகுபாடு இல்லை. சமீபத்தில் நான் பீகார் மாநில சாலை ேமம்பாட்டு திட்டத்துக்கான அறிவிப்புகளை வெளியிட்டேன். எனவே அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கும் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.

கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு அசாம் மாநிலத்தை வளப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தது. சுதந்திரபோராட்ட காலத்தில் அசாம் 5-வது இடத்திலிருந்தது. தற்போது அசாம் மாநிலம் நான்காவது ஏழை மாநிலமாகத்தான் உள்ளது.

ரூ.1 லட்சம் கோடி

வட கிழக்கு மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி நான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். அதில் இதுவரை 40 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி வட கிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். சாலைகள் மேம்பாடு, ரெயில்போக்குவரத்து,  குடிநீர் வினியோகம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

ெமஜாரிட்டி கிடைக்கும்

அசாம் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிக அளவு பதிவாகியுள்ளது. இதற்காக நான் மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். அசாம் மாநில மக்கள் மாற்றத்தை தரவேண்டும்.

சர்வானந்த சோனவால் தலைமையில் நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியும், ஊழலும்தான்  எங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Leave a Reply