- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

சென்னை, ஏப்.15-
தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநில அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விதி மீறல்
தர்மபுரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்துக்காக அனைத்து நடத்தை விதிகளும், பொது விதிகளும் மீறப்பட்டிருக்கின்றன. சாதாரண நிகழ்ச்சிகளுக்கே பொதுமக்களை லாரி போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்று விதிகள் வகுக்கப் பட்டிருக்கின்றன. பிரசாரத்துக்காக மக்களை வாகனங்களில் அழைத்து வருவது நடத்தை விதிகளின் படியும் குற்றமாகும்.
வெளிமாநில அதிகாரிகள்
ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு துணை போகும் அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் வரை காத்திருக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து நேர்மையான அதிகாரிகளை வரவழைத்து தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். தேர்தலை நியாயமாக நடத்தி ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply