- செய்திகள்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு அதியமான்கோட்டையில்…

தர்மபுரி , ஜூலை 29 –
தர்மபுரி அருகே உள்ள அதியமான்கோட்டையில்  தேய்பிறை அஷ்டமி  சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் கணபதி யாகம்,  அஷ்ட பைரவர் யாகம், அஷ்டலட்சுமி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருத்ர யாகம் நடத்தப்பட்டன. . இதைத் தொடர்ந்து கால பைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், 4 வேதபாராயணம், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு மங்கள ஆரத்தி வழங்கப்பட்டன. இரவு 10 மணி முதல் 12 மணி வரை குருதியாகம் நடைபெற்றது. வழிபாட்டில், பக்தர்கள் சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் தர்மபுரி, சேலம், நாமக்கல், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply