- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

தெ. ஆப்பிரிக்காவை காப்பாற்றிய ‘மோரிஸ்’ 4-வது போட்டியில் இங்கிலாந்து போராட்டம் ‘வீண்’

ஜோகன்ஸ்பர்க், பிப். 14:-

ஜோகன்ஸ்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை பகலிரவாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் டெய்லண்டர் கிறிஸ்மோரிஸ் சிறப்பாக ஆடிய அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தார்.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜோய் ரூட் மட்டுமே தனி ஆளாக நின்று சதம் அடித்து 109 ரன்களில்(124 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார்.  தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அதிகபட்சமா ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

263 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 266 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் 210 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து  தென் ஆப்பிரிக்கா தோற்கும் நிலையில் இருந்தது. ஆனால், 9-வது விக்கெட்டுக்கு மோரிஸ், அபாட் கூட்டணி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அதிரடியாக பேட் செய்த மோரிஸ் 38 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து(3பவுண்டரி, 4 சிக்சர்)ஆட்டமிழந்தார். அபாட் 3 ரன்களிலும், தஹிர் 4 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாப்ளே, ஸ்டோக்ஸ், ரஷித் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று 2-2 என்ற சமநிலையில் உள்ளன.

Leave a Reply