- சினிமா, செய்திகள்

தெறி பட திருட்டு வி.சி.டி.க்கள் விற்பனை விஜய் ரசிகர்கள் புகார்…

செங்கல்பட்டு. ஏப்.18-
செங்கல்பட்டு நகர விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் பூக்கடை ஜின் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஜய் நடித்த தெறி படம் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெறி படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளியாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோசப்பிடம் புகார் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply