- சினிமா, செய்திகள்

தெரியும்…ஆனா தெரியாது…

 

சூதுகவ்வும், பீட்சா-2 படங்களில் நாயகியாக நடித்த சஞ்சய் ஷெட்டி, தற்போது `ரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். திகில் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஒரு கார் சேசிங்கும் உண்டு. இதை நடிகையிடம் விவரித்த இயக்குனர், `கார் ஒட்டத் தெரியுமா?' என்று கேட்க, கிடைத்த வாய்ப்பை விட்டு விடவேண்டாம் என்று முடிவு செய்த சஞ்சய்ஷெட்டி `தெரியும்' என்று சொல்லி விட்டார். உண்மையில் அவருக்கு கார் ஓட்டத் தெரியாது. கார் சேசிங் படமாக்கப்பட இருந்த ஒரு மாத இடைவெளிக்குள் அவசரஅவசரமாக கார் ஒட்ட பயிற்சி எடுத்தார். அரைகுறையாக ஓடடத் தெரிந்த நிலையில் கார் சேசிங் படமாக்க வேண்டிய நாள் வந்து விட்டது. நடிகையும் வந்து காரை ஒட்டினார். காருக்குள் படத்தின் புதுமுகங்கள் ரிஷிகேஷ், விவேக், அம்ஜத் ஆகியோர் நடிகைக்கு கார் ஒட்டத் தெரியும் என்று தைரியமாக அமர்ந்திருக்க, எடுத்த வேகத்திலேயே தாறுமாறாகப் போகத் தொடங்கியது கார். அப்போது தான் நடிகைக்கு கார் ஓட்டத் தெரியாது என்பது டைரக்டருக்கு தெரிய வர, கட்்…கட்…கட்… இதற்குள் காருக்குள் இருந்த மூன்று புதுமுகங்களும் அதிர்ச்சியில் வியர்த்து வழிந்த நிலையில் உறைந்திருக்க…அப்புறமாய் டூப்பை வைத்து அந்த காட்சியை எடுத்திருக்கிறார்கள். பின்குறிப்பு: தற்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சீரியசாக கார் ஒட்ட கற்றுக் கொண்டு வருகிறார், சஞ்சிதா ஷெட்டி.

Leave a Reply