- செய்திகள்

தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி 3 நாட்கள் பிரசாரம் தமிழக காங். தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

தூத்துக்குடியில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ராகுல்காந்தி வருகிற 27, 28, மார்ச் மாதம் 1ம் தேதி ஆகிய 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கடந்த 4 ஆண்டுகளாக செயல்படவிடாமல் மோடி அரசு தடுத்து வந்தது.

கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று அனைவரும் கேட்டபோது, செவி சாய்க்காத மத்திய அரசு, தற்போது எதற்காக நீக்கி உள்ளார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்திய பொருளாதாரம் கலப்பு பொருளாதாரம். தனியார் துறையும், பொதுத்துறையும் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது. அ.தி.மு.க. அரசின் செயல்பாடு முற்றிலும் பொய்த்து போன செயல்பாடு. அவர்களால் தமிழர்களின் சுயமரியாதையை காப்பாற்ற முடியவில்லை. மத்திய அரசுக்கு அடிபணிந்து வேலை செய்தாலும், சிறப்பு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply