- செய்திகள், திருநெல்வேலி, மாவட்டச்செய்திகள்

தென்காசி அனிபா மீதான விசாரணை ஒத்திவைப்பு…

 

பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி கடந்த 2011ல் ரதயாத்திரையாக மதுரை திருமங்கலம் வந்தார். அப்போது பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீஸ் பக்ரூதீன் மற்றும் முகமது அனிபா என்ற தென்காசி அனிபா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
வத்தலகுண்டு பகுதியில் 2012ல் பதுங்கியிருந்த தென்காசி அனிபாவை பிடிக்க சென்றபோது, சிபிசிஐடி டி.எஸ்.பி கார்த்திகேயனை முயன்றபோது கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று திருச்சி சிறையிலிருந்து தென்காசி அனிபாவிடம் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் மாவட்ட நீதிபதி பூர்ணிமா விசாரணை நடத்தினார். பின்னர் வருகிற ஏப்ரல் 13ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply