- செய்திகள்

தூத்துக்குடி, திருச்சி மாநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு…

சென்னை, ஆக. 18-
தூத்துக்குடி, திருச்சி மாநகர் உள்ளிட்ட சில மாவட்ட அ.தி.மு.க.செயலாளர்களை அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டக் கழகச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.சண்முகநாதன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் சி.த.செல்லப்பாண்டியன் (முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புக்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி மாநகர் மாவட்டம்
திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மனோகரன், இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
திருச்சி மாநகர் மாவட்டக்கழகச் செயலாளர் பொறுப்பில் வெல்லமண்டி என்.நடராஜன் (மாவட்டக்கழக அவைத் தலைவர், சுற்றுலாத்துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புக்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
திருநலெ்வேலி புறநகர் மாவட்டம்

விடுவிப்பு

திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.நாராயணபெருமாள், (இவர் ஏற்கனவே வகித்துவரும் கழக அமைப்புச்செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செலாற்றுவார்)
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.ஜெயினுலாப்தீன்,
திருநெல்வேலி ்புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ராஜா(எ)அந்தோணி அமலராஜா ஆகியோர் இன்றுமுதல் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
நியமனம்
திருநெல்வேலி புறநகர் மாவட்டக்கழகச் செயலாளர் பொறுப்பில் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி.(திருநெல்வேலி நடாளுமன்றத் தொகுதி)
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் டி.பால்துரை (மாவட்ட ஊராட்சிக்குழு 24-வது வார்டு உறுப்பினர், ஆவரைகுளம்)
திருநெல்வேலி புறநகர் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் ஜெ.அகிலன் (கோவில் தெரு, கூட்டப்புளி, ராதாபுரம் தொகுதி)
ராதாபுரம் ஒன்றியக்கழக செயலாளர் பொறுப்பில் எம்.ராஜா (எ) அந்தோணி அமலராஜா (இடிந்தகரை, ராதாபுரம் தாலுகா)
பணகுடி பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் எம்.ஜெயினுலாப்தீன் (செய்யது உசேன் தெரு, பணகுடி) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
தென் சென்னை வடக்கு மாவட்டம்
அ.தி.மு.க.தலைமைச்செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சரஸ்வதி ரெங்கசாமி இன்றுமுதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply