- உலகச்செய்திகள், செய்திகள்

துப்பாக்கி குண்டுகள் முழங்க, வான வேடிக்கைகளுடன் 90-வது பிறந்த நாளை கொண்டாடினார் இங்கிலாந்து ராணி எலிசபெத்

லண்டன், ஏப். 22:-

இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 90-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். துப்பாக்கி குண்டுகள் முழங்க, வான வேடிக்கைளுடன் பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இங்கிாலாந்தின் ராணி எலிசபெத் கடந்த 1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி பிறந்தார். அவரின் தந்தை அரசர் நான்காம் ஜார்ஜ் மரணத்துக்குப் பின், கடந்த 1952-ல் ராணியாக அரியணை ஏறினார். ராணி எலிசபெத்துக்கு சார்லஸ், ஆன்ட்ரிவ், எட்வர்ட் ஆகிய 3 மகன்களும், ஆன்னி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ராணி எலிசபெத் தனது 90-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

லண்டனின் புறநகரில் இருக்கும் வின்ட்சர் கேஸ்டலில் இருக்கும் அரண்மனையில் ராணியின் பிறந்தநாளை அரசரும், ராணியும் கொண்டாடினர்.

இங்கிலாந்து பிரமதர் டேவிட் கேமரூன், ராணிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், “ பழைமையான இங்கிலாந்து நாட்டுக்கும், காமன்வெல்த் நாடுகளுக்கும், உலகிற்கும்  மலைபோல நிலை குலையா வலிமையின் சின்னமாக ராணி எலிசபெத் திகழ்கிறார். இந்த உலகத்தின் சில தனிச் சிறப்புமிக்க காலங்களில் ராணி வாழ்ந்துள்ளார். குறிப்பாக 2-ம் உலகப்போர், முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை, நிலவில் மனிதன் கால்பதித்தது, பனிப்போர் முடிவுக்கு வந்தது, வடக்கு அயர்்லாந்தில் அமைதி திரும்பியது போன்ற காலகட்டங்களை பார்த்தவர் ராணி எலிசபெத் '' என்று பெருமைப்படுத்தியுள்ளார். மேலும், நாடாளுமன்றத்திலும் பிரதமர் கேமரூன் ராணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார்.

ராணி எலிசபெத்தின் மகனும், மறைந்த இளவரசி டயானாவின் கணவருமான சார்லஸ், புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் 8-ம் ஹென்றி நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒருபகுதி வாசகத்தை வானொலியில் வாசித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதற்கிடையே அரச குடும்பத்தினர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அரண்மனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் ராணி எலிசபெத் தனது 2 பேரன்களுடனும், 5 கொள்ளு பேரன், பேத்திகளுடன் இருக்கிறார். இந்தபுகைப்படத்தை அமெரிக்காவின் புகழ்பெற்ற அன்னி லெபிவோட்ஸ் எடுத்தார்.

மேலும், அந்நாட்டின் அஞ்சல்துறை, ராணியின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 10 தபால்தலை களை வௌியிட்டுள்ளது. இந்த தபால்தலையில், ராணி, இளவரசர் சார்லஸ், அவரின் மகன் வில்லியம், அவரின் மகன் ஜார்ஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடுமுழவதும் உள்ள மக்கள் ராணிக்கு இணையதளம் மூலமும், நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  ஆனால், அதிகாரப்பூர்வமாக ராணியின் பிறந்தநாள் ஜூன் முதல்வாரம் பக்கிங்காம் அரண்மனை அருகே கொண்டாடப்படும்.

Leave a Reply