- செய்திகள், மாநிலச்செய்திகள்

தீவிரவாத தாக்குதலுக்கு சதி; மதரசா உரிமையாளர் கைது

 

புதுடெல்லி, பிப்.7-

நாட்டின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய மதரசா உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதிய இயக்கம்

கைதானவர் பெயர், அப்துஸ் சமி குவாஸ்மி. டெல்லி சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த அவர், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டாய் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர், புதிய தீவிரவாத இயக்கம் ஒன்றைத் தொடங்கி, நாடு தழுவிய நாச வேலைகளுக்கு சதித்திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரிய வந்திருப்பதாக, புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது-

தேசவிரோத செயல்

‘‘அப்துஸ் சமி, வன்முறையை தூண்டும் வகையில் பேசி வந்ததாகவும், சில இணைய தளங்களைத் தொடங்கி, அவற்றில் தனது உரையை பதிவேற்றி வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம், அவர் இளைஞர்களை தேச விரோத செயல்களில் ஈடுபட  தூண்டினார்.

அறக்கட்டளை ஒன்றையும், பல மதரசாக்களையும் அவர் நடத்தி வந்தார். அவருடைய சந்தேகத்துக்கு இடமான சில பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது வாரண்டு

உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்பு போலீசாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றம், அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாத பிரிவின் கீழ் கைது செய்வதற்கான வாரண்டை ஏற்கனவே பிறப்பித்து இருந்தது.

Leave a Reply