- சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தீக்குளிக்க முயன்ற 7 ரசிகர்கள் கைது நடிகர் சிம்பு வீட்டு முன்…

சென்னை, டிச. 22-
‘பீப் சாங்’ பாடல் சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகர் சிம்புவை கண்டித்து, தமிழகம் முழுவதும் மகளிர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால்  சிம்பு சென்னையை விட்டு தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டு முன் அவரது ரசிகர்கள் மதன், பிரகாஷ் உட்பட 7 பேர் நேற்று மதியம் தலையில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். ‘போடாதே. போடாதே. எங்கள் தலைவர் மீது பொய் வழக்கு போடாதே’ என போலீசாரை கண்டித்து கோஷமும் எழுப்பினர். இதற்கிடையே, தீக்குளிக்க முயற்சித்தவர்களை போலீசார்  கைது செய்தனர்.

Leave a Reply