- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் மாற்றம் சோழவந்தான் தொகுதி…

சென்னை, ஏப்.18-
தமிழக சட்டசபை தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான்(தனி) தொகுதியில், தி.மு.க. சார்பில் டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் தற்போது அந்த தொகுதியில் போட்டியிட முன்வராத காரணத்தால், சி.பவானி என்பவர் சோழவந்தான்(தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
—————

Leave a Reply