- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தி.மு.க.வுக்கு ஸ்டாலின் தலைமை ஏற்றால் பா.ஜனதா கூட்டணி அமைக்கும் சுப்பிரமணியசாமி பரபரப்பு பேட்டி

சென்னை, பிப்.22-

இந்துக்களின் கொள்கைகளுக்கு ஆதரவாக பேசி வரும் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு தலைமை ஏற்றால் பா.ஜ.க.கூட்டணி அமைக்கும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.

இந்து முன்னணி சார்பில்  தமிழகத்தை குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்  என்ற தலைப்பில் ஆவண படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியிட்டு விழாவில்  ஆவணப்படி சி.டி.யை  இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் வெளியிட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வுடன் கூட்டணி

தமிழகத்தில் பா-.ஜ.க.முழுமையாக வளர்ந்து வருகிறது.  தேர்தலில் தானும் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். தமிழகத்தில் எதிர்காலம் பா.ஜ.க.விடம் தான். ஏனென்றால் பா.ஜனதா ஒரு தலைவரின் கட்சி அல்ல. பலத்த தலைவர்களை கொண்ட கட்சியாக இருக்கிறது.

பாரதீய ஜனதா தேசிய கட்சி என்பதால் மாற்றம் ஏற்பட்டு 2019-ல் தமிழகத்தில் கட்டாயம் வலுப்பெறும். இந்துக்களின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்.  பா.ஜ.க., தி.மு.க. கூட்டணி அமைந்தால் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்று தெரிவித்திருந்தேன்.

தி.மு.க.வுடன் பாஜக கூட்டணி என நான் சொல்லவே இல்லை. நான் என்னுடைய கருத்தாக கருணாநிதி முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால், ஸ்டாலினுடன் பா.ஜ.க.வந்தால் இது தான் சரியான கூட்டணியாக இருக்கும் என்றேன். ஆனால் டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் இங்கு ஓடிவந்தார். அதனை கருணாநிதி ஒத்துக் கொண்டார்.

ராமர் கோவில்…

எங்களை பொறுத்தவரை தமிழத்தில் உள்ள இந்துகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளை இணைக்க முயற்சி செய்கிறோம்.   தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களை திருடன் என திட்டியவர். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும், தான் ஒரு இந்து என்றும் தைரியமாக கூறியதை பாராட்டுகிறேன்.

மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா கோவிலுக்கு செல்கிறார். மு.க.ஸ்டாலினும் கோவிலுக்கு சென்று வருகிறார்.  இந்துக்களுக்கு சாதகமாக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வுக்கு தலைமை ஏற்றால் வருங்காலங்களில் கூட்டணி வைப்போம். ஆனால் இது கட்சியின் கருத்து அல்ல எனது தனிப்பட்ட கருத்து. பா.ஜ.க.வில் நான் கூறியது தான் தற்பொழுது நடந்து வருகிறது.

இந்துக்களின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். பா.ஜ.க., தி.மு.க. கூட்டணி அமைந்தால் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்று தெரிவித்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply