- செய்திகள்

தி.மு.க.-காங்., புதிய ‘டீல்’ த.மா.கா.வின் முடிவு என்ன?

 

‘‘அடுத்த ‘ஆப்ரேஷன்’ ஆரம்பிச்சிடுச்சுங்கோ… ’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘யாரைப் பத்தி சொல்ற பா…?’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘தே.மு.தி.க. வட சென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், நேத்து தி.மு.க.வுல சேர்ந்திட்டார்… விஜயகாந்துடன் நெருக்கமாக இருந்த மாவட்ட செயலாளர்கள்ல ஒருத்தர்… தே.மு.தி.க. நிகழ்ச்சிகளுக்காக தாராளமா செலவு செஞ்சவராம், யுவராஜ்…
‘‘ஒரு கட்டத்துல, மாவட்ட செயலாளர்களை அழைச்சு, யாரோட கூட்டணி சேரலாம்னு விஜயகாந்த் கருத்து கேட்டாரில்ல… அப்ப பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், தி.மு.க.வோடு கூட்டணி அமைச்சா ஜெயிக்கலாம்னு சொன்னதா தகவல் வெளியாச்சுங்கோ…
‘‘அதுக்கு விஜயகாந்த், ‘நீங்க ஜெயிக்கிறதை மட்டும்தான் பார்க்குறீங்க… நம்ம கட்சி, ஆட்சியைப் பிடிக்கிறதைப் பத்தி யோசிக்கிறதில்லை’ன்னு சத்தம் போட்டாராம்… ஆனாலும், கட்சியினர் விருப்பப்படி தி.மு.க.வோடு கூட்டணி சேர விஜயகாந்த் சம்மதிப்பார்னு தி.மு.க. ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கடைசி வரைக்கும் காத்திருந்து ஏமாந்திட்டதா சொல்றாங்கோ…
‘‘இப்படி அதிருப்தியில இருக்கிற மேலும் பல மாவட்ட செயலாளர்களை தி.மு.க. தரப்பு தொடர்பு கொண்டிருக்காம்… சில மாதங்களுக்கு முன்னால, ம.தி.மு.க பிரமுகர்கள் வரிசையா தி.மு.க.வுக்கு தாவினாங்க… அதே மாதிரி ‘ஆப்ரேஷனை’ தே.மு.தி.க.வுலயும் தி.மு.க. ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்றாங்கோ…’’ என்று தகவலை முடித்தார் நிருபர் அழகுமணி.

‘‘புது ‘டீலுக்கு’ ஒத்துக்கிட்டதா சொல்றாங்க பா…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘எதைப் பத்தி சொல்ல வர்றீரு…?’’ என்று கேட்டார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘எங்களுக்கு 39 சீட்டுகளை கொடுத்திட்டு, த.மா.கா. உள்ளிட்ட மற்ற கட்சிகள் கூட பேசிக்குங்க’ன்னு காங்கிரஸ் தரப்பு தி.மு.க.வுக்கு நிபந்தனை விதிச்சிருக்கிறதா முந்தாநாள் பேசியிருந்தோம்… இந்த தகவலை, திருநாவுக்கரசர் நேற்று பேட்டி மூலமா உறுதிப்படுத்தி இருக்காரு பா…
‘‘எங்களுக்கு தொகுதி ஒதுக்கிட்டு த.மா.கா.வோடு பேசுறதுல ஆட்சேபணை இல்லை’ன்னு திருநாவுக்கரசர் சொன்னார்… இதுக்கு, ‘திருநாவுக்கரசர் பரிந்துரை எங்களுக்கு தேவை இல்லை’ன்னு ஞானதேசிகன் பதிலடி கொடுத்திருக்காரு வே…
‘‘இந்த நிலைமையில, நேற்று காலை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், டெல்லியில ராகுல் காந்தியை சந்திச்சு, தி.மு.க. தரப்புல தொகுதிகளை குறைக்கிறதைப் பத்தி சொல்லி இருக்கார்…
‘‘அதுக்கு ராகுல் காந்தி, ‘த.மா.கா.வை சேர்க்கிறதுக்காக காங்கிரஸுக்கு தொகுதிகளை குறைக்கிறதா’ன்னு ராகுல் அதிருப்தி தெரிவிச்சாராம்… இந்த விஷயத்தை இளங்கோவன், தொலைபேசி மூலமா மு.க.ஸ்டாலினை உடனே தொடர்பு கொண்டு சொன்னாராம்…
‘‘அப்ப ஸ்டாலின், ‘உங்களுக்கு 28 தொகுதிகளோட, ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டும் தர்றோம்… த.மா.கா.வுக்கு 25 தொகுதிகள் தர்றதா இருக்கோம்’னு புது திட்டத்தை முன் வைச்சாரம் பா…
‘‘நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, தி.மு.க.வின் புது ‘டீலுக்கு’ காங்கிரஸ் மேலிடம் நேற்று மாலை ஒத்துக்கிட்டதாகவும், இதுதொடர்பா இன்று அறிவிப்பு வெளியாகலாம்னு அறிவாலய வட்டாரத்துல இருந்து தகவல் வெளியாகி இருக்கு… ஆனா, த.மா.கா. தரப்புல என்ன முடிவு செஞ்சிருக்காங்கன்னு தெரியலை பா…’’ என்று முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘த.மா.கா.வுல நடக்கிறதை நான் சொல்லுதேன்…’’ என்று கூறிவிட்டு பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘த.மா.கா.வுக்கு, விஜயகாந்த் தரப்புல இருந்து திடீர்னு அழைப்பு வந்ததாம்… ‘எங்களிடம் இருக்கிற 124 தொகுதிகள்ல இருந்து 24 தொகுதிகள் தர்றோம்’னு அழைப்பு விடுத்தாங்களாம்…
‘‘இதைப் பத்தி நேத்து மாலை, த.மா.கா.  தரப்புல தீவிர ஆலோசனை நடத்தினாங்களாம்… மக்கள் நலக் கூட்டணியோட கூட்டணி வைச்சிருக்கிற விஜயகாந்துடன் கூட்டணி சேர்றதுல சாதக, பாதகங்கள் என்னென்ன அப்படின்னு தீவிரமா ஆலோசனை நடத்தி இருக்காங்க வே…
‘‘எம்.ஜி.ஆரைப் பத்தின பிரேமலதாவின் விமர்சனம், வைகோ துணை முதல்வர்னு சுதீஷ் திடீர்னு அறிவிச்சது, வைகோ ஆவேசமா பேசும்போது மேடையில மற்ற தலைவர்கள் கண் அசந்தது, துணை முதல்வர் பதவி வேண்டாம்னு வைகோ மறுத்தது இப்படி அந்த கூட்டணி தொடர்பான சமீபத்திய பரபரப்பு செய்திகளை எல்லாம், த.மா.கா. தரப்பு அலசி இருக்கு வே…
‘‘அதோட, தாங்கள் விரும்பும் தொகுதிகள், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும், ம.தி.மு.க.வும் போட்டியிட அதிக வாய்ப்புள்ள தொகுதிகளா இருக்கேன்னு த.மா.கா. நிர்வாகிகள் சுட்டிக் காட்டினாங்களாம்…
‘‘அ.தி.மு.க. கூட்டணியில எதிர்பார்த்த எண்ணிக்கையில தொகுதிகள் கிடைக்கலை… விஜயகாந்த் கூட்டணிக்கு போனா, விரும்புற தொகுதிகள் கிடைக்காத சூழ்நிலை இருக்கு… ஆனா, தி.மு.க. கூட்டணியில இருந்து திருப்திகரமான எண்ணிக்கையை சொல்லி இருக்கிறதால, விரும்புற தொகுதிகளையும் வாங்கிடலாம்’னு சிலர் நம்பிக்கை தெரிவிச்சு பேசினதா சொல்றாங்க வே
‘‘ஆனாலும், எந்தக் கூட்டணியில சேரலாம்னு முடிவு செய்யாமலே, த.மா.கா. நேற்று மாலை தொடங்கின ரகசிய ஆலோசனைக் கூட்டம், நீண்ட விவாதத்தால இரவுதான் முடிஞ்சிருக்கு வே…’’ என்று கூறி விவாதத்தை நிறைவு செய்தார் நிருபர் இசக்கிமுத்தன்.****

Leave a Reply