- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கருணாநிதி போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு

கடலூர், மார்ச்-30-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று, கனிமொழி எம்.பி. கூறினார்.

கலந்துரையாடல் கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர்  தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக மகளிர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தில், மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  கனிமொழிஎம்.பி.  பேசும்போது கூறியதாவது:
தமிழ்நாட்டில் எதை மிகப்பெரிய பிரச்சினையாக நினைக்கிறீர்கள் என்று, பொதுமக்களிடம்  நான் கேட்டபோது, மதுவினால் குடும்பத்தில் நிகழும் சண்டை சச்சரவுகள், வேலை வாய்ப்பின்மை, தொடரும் விலைவாசி உயர்வு என்று குறிப்பிட்டீர்கள். வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம், புதிய தொழிற்சாலைகளை தொடங்கப்படாததே.  தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளும், அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மூடப்பட்டுள்ளன.
முதல் கையெழுத்து
புதியதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களும், முதல்-அமைச்சரை சந்தித்து அரசின் ஒத்துழைப்பு, அனுமதியை பெற வேண்டி இருக்கும் நிலையில், முதல்-அமைச்சரை சந்திக்க முடியாத சூழ்நிலைமையால், தமிழக்தில் தொழில் தொடங்க யாரும் முன் வருவதில்லை, முயற்சிப்பதுமில்லை.
எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள். எங்கள் ஊருக்கு மதுக்கடைகள் வேண்டாம் என்று சொன்னாலும் அரசு மதுக்கடைகளை திறந்து, மக்களை குடிபழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. ஆகவே, தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தால் அவர் கையொப்பமிடும் முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கு என்பதை உங்களுக்கு உறுதிமொழியாக தருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply