- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 புதிய ரேஷன் கடைகள்

திருவள்ளூர், பிப். 4-

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 ரேஷன் கடைகளை அமைச்சர் ரமணா திறந்து வைத்தார்.

புதிய ரேஷன் கடை

திருவள்ளுர் மாவட்டம், பெருமாள்பட்டு ஊராட்சியில் ஓம்சக்தி நகர் மற்றும் ஆர்.ஜி.பி.நகர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகளின் கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.

அமைச்சர் ரமணா

பால்வளத்துறை அமைச்சர் ரமணா விழாவில் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடங்களை திறந்து வைத்தார்.
விழாவில், அமைச்சர் ரமணா பேசியபோது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். பொது மக்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வருவதுடன், பசி, பட்டினி போக்கிட இலவசமாக அரிசி வழங்கிட திருவள்ளுர் மாவட்டத்தில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 51 புதிய ரேஷன் கடைகள் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உறுதுணையாக…..

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 5 ஆயிரம் வங்கியின் மூலம் படிப்படியாக பொதுமக்களின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகிறது. விரைவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டுவிடும்.
ஓரிரு நாட்களில் இந்தப்பகுதிக்கு இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ரமணா கூறினார்.
விழாவில், பி. வேணுகோபால் எம்.பி., மணிமாறன் எம்.எல்.ஏ. (பூந்தமல்லி தொகுதி), ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் சந்திரசேகர் திருநாவுக்கரசு, தட்சணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் சக்தி ரமேஷ், சுதாகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பொம்மி, செல்வகுமாரி அண்ணாதுரை, பெருமாள்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரன், கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் :
திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சி, ஓம்சக்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைையை பால்வளத்துறை அமைச்சர் ரமணா நேற்று திறந்து வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளார்.

Leave a Reply