- செய்திகள், மாவட்டச்செய்திகள்

(திருவள்ளூர்) கத்தியை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு 2 வாலிபர்கள் கைது…

எல்லாபுரம், ஏப். 5-

திருவள்ளூர் மாவட்டம்  ஆரணி தூட்டார் தெருவை சேர்ந்தவர் மொய்தீன்  (வயது35) லாரி டிரைவர். இவர் ஆரணியில் பெட்ரோல் பங்கில் தனது  லாரிக்கு டீசல் போட்டு புறப்பட்டார். அப்போது இரண்டு வாலிபர்கள்  லாரியை வழிமறித்து கத்தி முனையில் டிரைவரை மிரட்டி பணம் கேட்டனர்.
பணம் தர மறுத்ததால் அவரை தாக்கி விட்டு அவரது பாக்கெட்டில் இருந்த  ரூ.500-யை அந்த வாலிபர்கள்  பறித்து கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம்  குறித்தும் அந்த வாலிபர்களின் அடையாளம் குறித்தும் ஆரணி போலீசில்   மொய்தீன் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன்  தலைமையில் போலீசார் விசாரணை  செய்தனர். பின்னர் போலீசார்
கன்னிகைபேர் பெரிய காலனி பெருமாள்கோவில் தெரு  ரஞ்சித்(வயது22), மாரியம்மன் கோவில் தெரு சுபாஷ்(வயது22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply