- செய்திகள், சேலம், மாவட்டச்செய்திகள்

(திருவள்ளூர்) ஏரியில் தவறி விழுந்து வாலிபர் சாவு மீன் பிடித்த போது பரிதாபம்…

செங்குன்றம், ஏப். 19-
சேலம்  மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கணேசன்  (வயது 35). இவர் புழல் லட்சுமிபுரம் சரஸ்வதிநகர் முதலாவது தெருவில் உள்ள தனது உறவினர் டில்லிபாபு என்பவரது வீட்டில்  தங்கியிருந்து சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கணேசன் நேற்று  முன்தினம் மாலை புழல் புத்தகரம் அருகே உள்ள தாங்கல் ஏரியில் தூண்டிலால்  மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் ஏரியில் தவறி  விழுந்து சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த  சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply