- செய்திகள், திருவாரூர், மாவட்டச்செய்திகள்

திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை அமல் படுத்த வேண்டும் திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை…

மன்னார்குடி, ஏப்.15-
சட்ட மாமேதை அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, வி.சி.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினர்.
அப்போது,  விடுதலைக் கழக மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு கூறுகையில், அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்கும் வழி என்கிற புத்தகத்தை உயர்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்துநிறுத்திட மத்திய சட்ட ஆணையம் வடிவமைத்து கொடுத்திருக்கின்ற திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை உடனடியாக தனி சட்டமாக இயற்ற வேண்டும் என்றார்.

Leave a Reply