- செய்திகள், மாவட்டச்செய்திகள்

திருமணமான ஆறு மாதத்தில் இளம் பெண் தீ குளித்து சாவு ஆர்.டி.ஓ. விசாரணை…

கமுதி,ஏப்.20-
திருமணமான ஆறு மாதத்தில் இளம் பெண் தீ குளித்து இறந்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
கமுதி அருகே உள்ள வங்காருபுரத்தைச் சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது23). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகேஸ்வரிக்கும் (19) கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துமுருகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இதையடுத்து முருகேஸ்வரி தனது  கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்களிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த முருகேஸ்வரி சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து  அபிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் இறந்துள்ளதால் பரமக்குடி சார் ஆட்சியர் சமீரான் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply