- செய்திகள், மாநிலச்செய்திகள்

திருப்பதியில் கூலி தொழிலாளி கைது ரூ.15 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்

திருப்பதி மார்ச்.1-
திருப்பதி மற்றும் திருப்பதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கை மற்றும் வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது திருப்பதி சேஷாசல வன பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு ஆர்,எஸ்.ஐ தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். நள்ளிரவு  வனப்பகுதியில் ஆள் நடமாட்டத்தை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு 15-க்கும் மேற்ப்பட்ட கூலி தொழிலாளர்கள் தலையில் செம்மரங்களை சுமந்து செல்வதை கண்டனர்., போலீசாரை கண்டதும் தொழிலாளர்கள் செம்மரங்களை அங்கேயே போட்டுவிட்டு ஓட தொடங்கினர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். விசாரனையில் அவர் வேலூர் மாவட்டம் நரசிங்காபுரத்தை சேர்ந்த வேலய்யன் என்பது தெரியவந்தது, மேலும் செம்மர கடத்தல் கூலிகள் விட்டு சென்ற ரூ 15 லட்சம் மதிப்புள்ள 14 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யபட்டன.

Leave a Reply