- செய்திகள்

திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

திருத்தணி, ஜூலை. 29-
திருத்தணி முருகன் கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடிக்கிருத்திகை விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர்.
அறுபடை வீடு
அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா, செவ்வாய்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. புதன்கிழமை ஆடி பரணியும், வியாழக்கிழமை ஆடிக்கிருத்திகை திருவிழாவும் நடைபெற்றது.
காவடிகளுடன்
விழாவையொட்டி, தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட ஆர்களில் இருந்தும் பக்தர்கள், கார்,வேன், லாரி, பஸ் மற்றும் ரயில்கள் மூலம் திருத்தணிக்கு காவடிகளுடன் வந்து குவிந்தனர்.
365 படிகள் ஏரி
இதில் சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தலை மொட்டை அடித்து, உடல் முழுவதும் வேல், எலுமிச்சை, தேங்காய் அலகு குத்தி மயில்காவடி, புஷ்பகாவடி, பால்காவடிகள், பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்களை வண்ணம் 365 படிகள் ஏரி மலைக்கோயிலுக்கு வந்திருந்தனர்.
5 மணி நேரம் காத்திருப்பு
பின்னர் பக்தர்கள் மூலவரை தரிசிக்க பொதுவழியில் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகன் சுவாமியை வழிபட்டனர். அதிவிரைவு தரிசன டிக்கெட் 150 ரூபாய்க்கு சிறப்பு வழியில் சென்றும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
தங்க கிரிடம்
ஆடிக்கிருத்திகை முன்னிட்டு அதிகாலை மூலவ முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சல் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதகல், தங்க கிரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காவடி மண்படத்தில் உற்சவ பெருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திருப்பதி சீர்வரிசை
தொடர்ந்து காலை 9 மணிக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் இருந்து 11-வது ஆண்டாக பட்டு வஸ்திரம் கொண்டுவரப்பட்டு உற்சவ முருகப்பெருமானுக்கு அணிவித்து சிறப்பு பூஜை நடத்தினர். ஆடிக்கிருத்திகை விழாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் தனபாலன் கோயில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

காவடிகளுடன் வந்த பக்தர்கள் அவதி ( பாக்ஸ் செய்தி )

3 கி.மீ. முன்பாகவே
சென்னை, திருவள்ளூர், ஆந்திர மாநிலம் திருப்பதி, ரேணுகுன்டா, புத்தூர், நகரி, நாகலாபுரம், திருவண்ணாமலை, வேலூர், சித்தூர், ஆகிய ஊர்களில் இருந்து திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக காவடிகளுடன் வந்த பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டருக்கு முன்னாக வேன், கார், பஸ்கள் நிறுத்தப்பட்டன.
வயதானவர்கள், குழந்தைகள் அவதி
இதனால் பக்தர்கள் சரவணப்பொய்கைக்கு வந்து நீராடி 365 படிகளும் நடந்து சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட சுமார் 5 மணி நேரம் ஆனதால் வயதான பெரிவர்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிபட்டனர்.
வாகனங்களில் காவடி
மேலும் மலைக்கோயிலுக்கு இருசக்கர வாகனங்களில் காவடி எடுத்த வந்த பக்தர்களையும் போலீசார் மலைக்கோயிலுக்கு செல்லாமல் தடுத்ததால் பக்தர்கள் காவடிகளுடன் சாலையில் கடும் வெயிலில் நடந்து செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் இருந்த தடுப்பு சுவரின் மீது ஆபத்தான முறையில் கோயிலுக்கு சென்றனர்.
படம் உள்ளது.

Leave a Reply