- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் 2 லட்சம் பக்தர்கள் வழிபாடு

திருத்தணி, ஜன. 2-
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் கலந்துகொள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருத்தணி கோவில்
திருத்தணி முருகன் மலைக் கோவிலில் புத்தாண்யொட்டி ேநற்று  முன்தினம் இரவு, 8 மணிக்கு தங்கத் தேரில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் கலந்து கொள்ள மலைக்கோவிலில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில், 7 நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்று மூலவரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு கட்டண டிக்கெட்டுகளும் மலைக்கோவிலில் விற்பனை செய்யப்பட்டது.

பாதுகாப்பு

புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். திருத்தணி டி.எஸ்.பி. பொற்செழியன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி மலைக் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply