- செய்திகள்

திருத்தணி அருகே நடந்த முகாமில் 204 பேருக்கு நல உதவிகள் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வழங்கினார்…

 

 

 

 

 

திருத்தணி, ஆக. 18-
திருத்தணி அடுத்துள்ள கார்த்திகேயபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சத்து 39 ஆயிரத்துக்கான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி வட்டம் கார்த்திகேயபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.  இம்முகாமில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, உள்பட பல துறைகளின் சார்பாக சிறு கண்காட்சி அமைக்கப்பட்டு அந்தந்தத் துறை சார்பாக அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து அரசுத் துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

204 பேருக்கு நலஉதவிகள்
வருவாய்த்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை ஆகிய துறைகளின் மூலமாக 204 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 39 ஆயிரத்து 155-க்கான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வழங்கினார்.

முகாமில் மொத்தம் 323 மனுக்கள் பெறப்பட்டு அதில் 204 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக வேளாண்மைத்துறை, கூட்டுறவு துறை, சமூக நலத்துறை, கல்வித் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய அரசுத்துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்கள் திட்ட உரையாற்றினார்கள்.

கோ.அரி எம்.பி.

இந்தநிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி, உதவி ஆட்சியர் (பயிற்சி) கமல்கிஷோர், திருத்தணி ஒன்றிய குழுத் தலைவர் ரவி, திருத்தணி நகர் மன்றத்தலைவர் சவுந்தர்ராஜன், திருத்தணி வட்டாட்சியர் அபிஷேகம், ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply