- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு…

திருச்சி, ஏப்.15-

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

முறையீடு

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் கீழ் பலர் பணிபுரிந்து வருகின்றனர். ஆள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில், 67 தொழிலாளர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை ஒன்று திரண்ட 67 ஒப்பந்த தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகியிடம் சம்பளம் கேட்டு முறையிட்டு உள்ளனர்.

பணிகள் பாதிப்பு

உரிய பதில் கிடைக்காததால் தொழிலாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளதால் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது, சம்பளத் தொகை முழுவதுமாக பாக்கி இன்றி வழங்கப்பட்டால் ஒழிய வேலைக்கு திரும்ப மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

Leave a Reply