- அரசியல் செய்திகள், மாநிலச்செய்திகள்

திருச்சி சிவா எம்பி கோரிக்கையை பரிசீலிக்க வெங்கையைா நாயுடு பரிந்துரை கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்கிற கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாத விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா “ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைய முடியும் என்பது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” எனவும் அவர் பேசினார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் கோரிக்கைகளை கல்வித்துறை அமைச்சகம் பரிசீலிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply