- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரமோற்சவம்…

திருப்பதி, டிச.10:-

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தில் பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தயார் வீதி உலா வந்தார்.
அன்னவாகனம்
திருப்பதி பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று முன்தினம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை பிரமோற்சவத்தின் முதல் வாகனமான சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் திருமாட விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை பெரிய சேஷ வாகனத்திலும் இரவு அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பக்தி பரவசம்
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வாகன சேவைக்கு முன்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று காலை முத்து பந்தல் வாகனத்திலும் இரவு சிம்ம வாகனத்திலும் தாயார் காட்சி கொடுத்தார். பிரமோற்சவத்தை முன்னிட்டு கோவில் தெப்ப குளங்கள் பல்வேறு வண்ண விளக்குள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

படவிளக்கம்:

திருச்சானூர் பிரமோற்சவத்தை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Leave a Reply