- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் மலைக்கோவிலில் 1008 சங்காபிஷேகம்…

திருக்கழுக்குன்றம் –
திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரிஸ்வரர் திருக்கோவிலில், 1008 மஹாசங்காபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சங்காபிஷேகத்தை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர்.
1008 சங்குகள்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் மலைக்கோவிலில் ஆண்டுதோரும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் (திங்கட்கிழமை) 1008 சங்குகளைக் கொண்டு மூலவர் வேதகிரிஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெறும். அதுபோல் நேற்று மலைக்கோவிலில் ஒரு யாக குண்டத்துடன், நவகலசங்கள் அமைக்கப்பட்டது.

கடந்த 1939,  1952, 1976, 1988, 1999, சமீபத்தில் 2011-ம் ஆண்டு என, 7 ஆண்டுகளில், சங்குதீர்த்த குளத்தில் தோன்றிய 7 சங்குகளுடன் இடம்புரிசங்கு, வலம்புரிசங்கு, திவிசங்கு, திரிசங்கு என குளத்தில் தோன்றிய சங்குகளையும் சேர்த்து 1008 சங்குகளை, 40 டிரேக்களில் ஒரு டிரேக்கு 25 சங்குகள் என வரிசையாக வைக்கப்பட்டு அதில் சங்குதீர்த்தக் குள புனிதநீர் ஊற்றபட்டு  புஷ்பஅலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
மலைக்கோவிலின் பரம்பரை சிவாச்சாரியார் வேதமூர்த்தி தலைமையில், திருக்கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில், வேள்விகள் நடைபெற்றன. பிற்பகல் 1.30 மணி அளவில் வேள்விகள் முடிவுற்றன. 2.00மணி அளவில் கலசங்கள் புறப்பட்டன. 2.30மணி அளவில் ஒவ்வொரு டிரேக்களிலும் இருந்த சங்குகளில் உள்ள நீரினைக்கொண்டு, சுவாமி மூலவருக்கு அபிஷேகம்(சங்காபிஷேகம்) செய்யபட்டது.

இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சங்காபிஷேகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சதாசிவா சிவபிரம்மா ஆன்மீக அன்பர்களால், பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்காபிஷேக விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Leave a Reply