- செய்திகள், திண்டுக்கல், மாவட்டச்செய்திகள்

திண்டுக்கல்லில் கிணற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பலி குளிக்கச் சென்றபோது விபரீதம்…

திண்டுக்கல், ஏப்.20-
திண்டுக்கல் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
மாணவர்கள்
திண்டுக்கல் அருகே உள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். லோடு மேன். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகன்கள் பிராங்கிளின் பிரான்சிஸ் (வயது14) 8-ம் வகுப்பும், கௌதம் (வயது12) 6-ம் வகுப்பும், சான் ரோஷன் (வயது 8) 3-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் கௌதம், சான் ரோஷன் இருவரும் அப்பகுதியில் விளையாடச் சென்றுள்ளனர்.
தோட்டத்து கிணறு
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த தயார் சித்ரா மகன்களை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது ஊருக்கு அருகே ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்று கரையில் மாணவர்களின் சட்டை, காலணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் கிணற்றில் குதித்து தேடினர். அப்போது 10 அடி ஆழத்தில் கிணற்று சகதியில் சிக்கி கொண்டிருந்த இருவரின் உடலையும் மீட்டனர்.
ஒரே குடும்பத்தைச்  சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply