- உலகச்செய்திகள், செய்திகள்

தாய்லாந்த் (பஹூகட்)

செல்வோம் சுற்றுலா!

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் இருக்கும் ப்ஹுகட் (phuket) மாகாணம் சுமார் 32 குறுகிய தீவுகளை கொண்டது. அழகின் பிறப்பிடமாய் திகழும் இந்த தீவுகளை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரம்மியமானவை. இங்குள்ள கடல்பரப்பில் ஸ்பீட் போட், ஜெட் சகி போட், பெரிய வால் கொண்ட படகு, கண்ணாடி தரை கொண்ட படகு என அணைத்து சவாரிகளும் செய்யலாம்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தங்குவதற்கு சொகுசு விடுதிகள் கடல்கரையோரம் நிறுவப்பட்டுள்ளன. அருகே உள்ள ஜமேஸ் பான்ட் (James Bond) தீவு, இயற்கையின் மறுமுகம். கோ தபு (ko thapu) என்று அழைக்கப்படும் தீவில் செங்குத்தாக இருக்கும் பாறை தீவு, பல ஜமேஸ்  பான்ட் படங்களில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை பாறை கடலுக்குள்ளே தனியாக மிதக்கிறதா இல்லை தவழ்கிறதா என்று யோசிக்க வைக்கும்.  அருகே இருக்கும் மற்றுமொரு தீவில் இயற்கையாக உருவான கடல் குகைகள் ஒரு பிரம்மாண்டம், கநொஎ (canoe) எனும் சிறு மிதவைகள் மூலம் இந்த கடல் குகைகளுக்குள் பயணிக்கலாம்.
இங்குள்ள பல தீவுகள் தாய்லாந்தின் அழகுக்கு மேலும் அழகூட் டிகொண்டே  இருக்கிறது.
நீல கடல் என்று சொல்லப்படும் பகுதியில் கடலுக்கடியில் இருக்கும் பாறைகள் கண்ணாடி பிம்பம் போல தெளிவாக காட்சியளிக்கும். கிராபி கடல் பகுதிகருகே சுமார்  40 டிகிரி வெப்பம் கொண்டிருக்கும் எமரால்டு நீச்சல் குளம் இயற்கையாக உருவான மற்றுமொரு அதிசயம். பவழ தீவில் பல நீர் சாகசங்களை ஈடுபடலாம், கடல் நடை என்று சொல்லப்படும் sea walk இங்கே பயிற்சி செயயப்படுகிறது. கடலுக்கடியில் நின்றுகொண்டு பல வகை மீன்களுக்கு உணவு கொடுப்பதும், நம்மை சுற்றி மீன்களை பார்க்கும் போது நாமும் மீனாக மாறிவிடுமோ என்று எண்ணம் தோன்றும்.
ப்ஹுகட் பகுதியின் இரண்டாவது பெரிய தீவு சமொய் தீவு. இளநிலை சுற்றுலா பயணிகளின் சொர்க்கம். கொஹ் ப்ஹங்கேன் என்ற இடத்தில் நடக்கும் முழு நிலவு வேடிக்கை விருந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கொண்டாடப்படும். கடல் பரப்பு முழுவதும் மக்கள் வெள்ளம், இரவு முழுவதும் விருந்து என இரவு வாழ்கையை  ரசிக்க உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் இங்கே கூடுவர்.

தெளிவான கடற்கரை பகுதிகள், அமைதியான சூழல், எங்கு நோக்கினும் நீலம்,  இருப்பது நிஜபடமா இல்லை நிழல் படமா என்று ஆச்சர்யப்படுத்தும் அழகு. இவை அனைத்தும் ப்ஹுகட் பகுதியின் அங்கம்.
தாய்லாந்தின் வடக்கு பகுதியின் சங் மாய் (Chang Mai) ஒரு அருமையான நகரம். தாய்லாந்தின் கள்ளச்சார பரிணாமத்தின் பிம்பமே இந்த நகரம். இந்த நகரத்தில் தாய்லாந்தின் மிக பழமையான புத்தர் கோவில், பல வகை மதம் சார்ந்த ஆலயங்கள் உள்ளன.  கலாச்சாரத்தை பறைசாற்றும் லோய் க்ரதோங் (Loi Krathong) என்று வான் விளக்கு திருவிழா மற்றும் பூ திருவிழாகளில் பங்குபெற பல நாடுகளின் கலாச்சார  ரசிகர்கள் இங்கே கூடுவர்.

Leave a Reply