- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தாம்பரம் தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு தேர்தல் விதி மீறியதாக…

தாம்பரம்,ஏப்.27-
தாம்பரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலர்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஆர்.ராஜா போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதற்காக பீர்க்கன்கரணை பேருராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சுந்தரராஜன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வாக்கு கேட்டு புடவை கொடுப்பதாக  தாம்பரம் தேர்தல் அதிகாரி விமல்ராஜுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல்
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வராஜ் விசாரணை நடத்தினார். மேலும், அங்கு நின்றிருந்த வேனை சோதித்ததில் அதில் 17 புடவைகள் இருந்தன. இதனையடுத்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுனர் வேலு கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் சுந்தராஜ் மற்றும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் மீது பீர்க்கன்கரணை போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply