- உலகச்செய்திகள், சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள், விளையாட்டு

தவான் ‘தாண்டவம்’ இலங்கைக்கு 197 ரன்கள் இலக்கு

ராஞ்சி, பிப். 13:-

ராஞ்சியில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில், சிகார் தவானின் அதிரடியான அரைசதத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது.

புனேயில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை வென்று 1-0 என்று முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது போட்டி, ஜார்கன்ட் மாநிலம், ராஞ்சி நகரில் நேற்று இரவு நடந்தது. இலங்கை அணியில் டிக்வேளாவுக்கு பதிலாக தில்சன் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்திய அணி தரப்பில் எந்தமாற்றமும் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, தவான் இருவரும் தொடக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தை கையாண்டனர்.

குறிப்பாக பிரன்சன்னா வீசிய 4-வது ஒவரில் தவான் ஹாட்ரிக் பவுண்டரியும், ரோகித் ஒரு பவுண்டரியும் அடித்து ஸ்கோரை விரட்டினர். அதன்பின், தவான் தனது பேட்டால் தாண்டவமாடினார்.  சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பந்தை  விரட்டிய தவான் ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைத்தார்.  22 பந்துகளில் டி20 போட்டியில் தவான் தனது முதலாவது அரைசதம் அடித்தார். அதுமட்டுமல்லாமல், டி20 போட்டியில் அதிகவேகமாக அரைசதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

அதன்பின்பு சிறிதுநேரமே தாக்குப்பிடித்த தவான் 51 ரன்களில் (25 பந்துகள், 2 சிக்சர், 7பவுண்டரி) சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்ெகட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ரகானே, ரோகித்சர்மா கூட்டணி 47 ரன்கள் சேர்த்தது. இவர்களின் ஆட்டத்தால் 10 ஒவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.  ரோகித் சர்மா 43(36 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்)ரன்களில் சமீராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார்.

அடுத்த சிறிது நேரத்தில் ராகனே25 (21பந்து, 3 பவுண்டரி)ரன்களில் பெவிலியன் திரும்பினர். 4-வது விக்கெட்டுக்கு ரெய்னா, பாண்டயா கூட் டணி வேகமாக ரன்களைச் சேர்த்தனர். பெரேரா வீசிய 19-வது ஓவரில் பாண்டயா 27(12பந்து, 1பவுண்டரி, 2 சிக்சர்)ரன்களிலும், அடுத்த பந்தில் ரெய்னாவும் (30 ரன்களில்) கடைசிபந்தில் யுவராஜ் டக்அவுட் ஆக பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் எனும்  பெருமையை பெரேரா பெற்றார்.

தோனி 9 ரன்களிலும், ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்தியஅணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் பெரேரா 3 விக்கெட்டுகளையும், சமீரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Leave a Reply