- செய்திகள், விளையாட்டு

‘ ‘தல’ தலைமையை மிஸ் பண்ணிட்டேன்’ தோனி குறித்து டேவ்னே பிராவோ உருக்கம்

சென்னை, ஏப். 7:-

உலகிலேயே மிகச்சிறந்த கேப்டன்களில் இந்திய அணி கேப்டன் தோனி யும் ஒருவர், அவரின் தலைமையில் 9-வது ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை இழந்துவிட்டேன் என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டேவ்னே பிராவோ உருக்கமாகத் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் டேவ்னே பிராவோ கலந்து கொண்டார். அப்போது  நிருபர்களிடம் பிராவோ பேசியதாவது, “  9-வது ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் விளையாடுவதை இழந்துவிட்டேன். சென்னை அணியின் ஒவ்வொரு வீரரும் அவரை இழக்கிறோம். இந்த உலகில் உள்ள மிகச்சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். பல கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறோம். இந்த முறை சுரேஷ் ரெய்னா தலைமையில் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாட இருக்கிறேன்.  அவருக்கு அனைத்து விதமான ஆதரவும் வழங்குவோம்.

குஜராத் லயன்ஸ் ஒருபோதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஆக முடியாது. இன்னொரு சி.எஸ்.கே. அணியாகவும் இருக்காது. ஆனால், சென்னை மக்கள் குஜராத் அணிக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். ஏன்னென்றால், சி.எஸ்.கே. அணியில் உள்ள 5 வீரர்கள் ரெய்னா, மெக்கலம், ஜடேஜா, டேவ்னே ஸ்மித் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளானர். புதிய அணியில்இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சி.எஸ்.கே அணியை இழக்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 ஆண்டுகளில்  சாம்பியன்  பட்டத்தையும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 2010 மற்றும்  2014-ல் மகுடத்தையும் சூடியது. இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக  சென்னை, ராஜஸ்தான் அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து லோதா கமிட்டி  உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து புதிதாக குஜராத் லயன்ஸ்,புனே அணி  களமிறங்குகிறது.

Leave a Reply