- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

தலையாரிபாளையம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்

அத்திப்பட்டு, ஜன 18-

அத்திப்பட்டு அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி தலையாரிபாளையம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான மின்சாரம் சப்ளை செய்ய முடியாமல் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. அதுகுறித்து ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு புகார் தெரிவித்தார்.

இதனை ஏற்ற தமிழ்நாடு மின்பகிர்மான கழக வடசென்னை கோட்டத்தின் சார்பில் புதிய டிரான்ஸ்பார்மார் நிறுவப்பட்டது. இந்த புதிய டிரான்ஸ்பார்மரை பொங்கல் தினத்தை முன்னிட்டு ஊராட்சிதலைவர் ரவிச்சந்திரன் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் சிவா மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply