- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை அரசியல் கட்சி பிரதிதிகளுடன்

சென்னை, பிப்.17-
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக, தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் பட்டியல்
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், வாக்காளர் பட்டியலை துல்லியமாக தயாரிக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை கடந்த 15-ந் தேதி தேர்தல் ஆணையம் துவக்கியது. பூத் அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலிலுள்ள பெயர்களை சரிபார்த்து வருகின்றனர்.
ஆலோசனை
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி குறித்து ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, அவர் விரிவாக பதிலளித்தார்.
மேலும், ‘நீக்கப்படவுள்ள வாக்காளர் பெயர் பட்டியலை 20-ந் தேதி வெளியிடுதற்கு முன்பாக, 19 தேதி அதன் பிரதிகள்  எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தனது ‘வாட்ஸ் அப்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply