- உலகச்செய்திகள், செய்திகள்

தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராட வேண்டும் பாகிஸ்தானுக்கு, ஆப்கான் வலியுறுத்தல்

காபூல்,ஏப்.26-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வாரம் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில், 64 பேர் கொல்லப்பட்டனர். 340-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்ைலயில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பாகிஸ்தான் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில், தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராட வேண்டும் என பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று பாராளுமன்றத்தில் பேசியதாவது:-
‘‘தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள் ஏது? கெட்ட தீவிரவாதிகள் ஏது?. அவர்கள் தீவிரவாதிகள்; அவ்வளவுதான். அவர்களுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply