- செய்திகள்

தர்மராஜா கோவிலில் திருக்கல்யாண உற்சவம் பூண்டி அருகே…

திருவள்ளூர் ஜுலை. 27-
திருவள்ளூர் அடுத்துள்ள பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த நம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வாரம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குண்டம் இறங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து தருமராஜவிற்கும், திரவுபதியம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கல்யாண உற்சவத்தை சிறப்புடன் நடத்தினார்கள். மேலும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தேறியதும் பொதுமக்கள் மற்றும் மணமக்களான தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் ஆகியோர்களுக்கு சீர்வரிசையுடன், அன்பளிப்புகளும் வழங்கினார்கள். கோவில் தர்மகர்த்தா பாலன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

Leave a Reply