- செய்திகள், விளையாட்டு

தர்மசாலாவில் பாகிஸ்தான் விளையாடக் கூடாது

கராச்சி, மார்ச் 7:-

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தர்மசாலாவில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடக் கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இமாசலப் பிரதேச முதலமைச்சர் வீர்பத்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், வீர்பத்திர சிங்கின் அறிக்கையால் தாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வீர்பத்திர சிங்கின் அறிக்கை பொறுப்பற்றதாக உள்ளது என்றும் விருந்தோம்பலுக்கு எதிரானதாக உள்ளது என்றும் இம்ரான் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கை வெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி தர்மசாலாவில் விளையாடுவது நல்லதல்ல என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

Leave a Reply