- சினிமா, செய்திகள்

தயங்கிய அஞ்சலி

 

`தரமணி' படத்தை இயக்கி முடித்த கையோடு டைரக்டர் ராம் `பேரன்பு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் மம்முட்டி-அஞ்சலி ஒரு குழந்தைக்கு பெற்றோராக நடிக்கிறார்கள். இவர்களின் குழந்தையாக `தங்கமீன்கள்' படத்தில் நடித்த சபுனா நடிக்கிறார். குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடி என்றதும் சந்தோஷமாய் சம்மதித்த அஞ்சலி, ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றதும் கொஞ்சம் தயங்கி இருக்கிறார். என்றாலும் இயக்குனர் சொன்ன கதையின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் அதற்கும் சம்மதித்திருக்கிறார்.

Leave a Reply