- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழ்புத்தாண்டு படி பூஜை விழா சுவாமிமலை முருகன் கோவிலில்…

கும்பகோணம், ஏப்.15-
சுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று தமிழ்ப்புத்தாண்டு படி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு பூஜை
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக திகழ்கிறது.  இக்கோவிலில் சித்திரைப் பெருவிழா நேற்று படி பூஜையுடன் துவங்கி 25-ம் தேதி நிறைவடைகிறது.  தமிழ்வருடப் பிறப்பை முன்னிட்டு இங்கு 60 படிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இங்கு பிரபவ முதல் அஷய வரை தமிழ் வருட தேவதைகள் 60 படிகளாக அமைந்துள்ளனர்.  நேற்று துன்முகி வருடம் துவங்குவதால், துன்முகி படிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருத்தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23-ந் தேதி காலை நடைபெற உள்ளது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

Leave a Reply