- அரசியல் செய்திகள், செய்திகள்

தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் ஆலோசனை அர்ஜுன் மூர்த்தியும் பங்கேற்றார்

சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த், அடுத்தமாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். அப்போது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. பின் தனது சகோதரர் சத்தியநாராயணனை சந்திக்க ரஜினிகாந்த் பெங்களூரு செல்வதாக தெரிகிறது.

பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழருவி மணியன், ‘முதல்வர் வேட்பாளர் குறித்துப் பேசவில்லை’ என்றார்.

ரஜினியின் புதிய கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்றவர், ரஜினி வருகையால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று எந்தக் கட்சியும் சொல்லாது என்றார்.ஆன்மீக அரசியலுக்கும் மத அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்றார்.

கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். மாற்று அரசியல் ரஜினி மூலம் இந்த மண்ணில் மலரும் என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது அர்ஜுன் மூர்த்தியும் உடனிருந்தார்

Leave a Reply