- செய்திகள், வணிகம்

தமிழக வெள்ள நிவாரணம் ரெனால்ட்-நிசான் ரூ.1 கோடி நிதி

புதுடெல்லி, டிச. 16:-

தமிழக வெள்ள நிவாரணத்துக்காகவும், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், ரெனால்ட்-நிசான் நிறுவனம் முதல்அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்காக ரூ. ஒரு கோடி நிதியை நேற்று வழங்கியது.

இது குறித்து ரெனால்ட்-நிசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி கார்லோக் கோசன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மோசமான பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்களின் ரெனால்ட்-நிசான் நிறுவனம் தமிழகமக்களுடன் துணை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டவுடன் ஏற்கெனவே ரூ. 5 லட்சம் உடனடி நிவாண நிதியும் நிசானநிறுவனம் அளித்தது. மேலும், காஞ்சிபுரம், தாம்பரம் பகுதியில் மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் அந்தநிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply