- அரசியல் செய்திகள்

தமிழக பா.ஜ.க. தலைவருடன் சிவாஜியின் மூத்த மகன் சந்திப்பு

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், தனது மகன் துஷ்யந்துடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை நேற்று சந்தித்து பேசினார்.

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பா.ஜ.க. தனது பலத்தை அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், முக்கியஸ்தர்களை தனது கட்சியில் இணைக்க முக்கியத்துவம் காட்டி வருகிறது. காங்கிரசின் முக்கிய நிர்வாகியாக இருந்த குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார். ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரும் பா.ஜ.கவில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், மூத்த நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் இன்று திருவான்மியூரில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் சந்தித்தார். பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது. ராம்குமார், தன் மகன் துஷ்யந்துடனுடன் விரைவில், பா.ஜ.கவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply